சென்னை: தமிழ்நாடு முழுவதும் 20 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும் 20 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருப்பதுடன் 7 பேர் ஊரக வளர்ச்சி முகமை அதிகாரிகளாகவும், 13 பேர் சார் ஆட்சியர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பதவி ஏற்றது முதல் அவ்வப்போது உயர் அதிகாரிகள் முதல் கீழ்மட்ட அதிகாரிகள் வரை பலர் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அடிக்கடி காவல்துறை உயர் அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகளின் இடமாற்றமும் நடைபெற்று வருகிறது.
இன்று காலை 11 ஐபிஎஸ் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு இடமாற்றம் செய்து உத்தரவிட்ட நிலையில், பிற்பகல் 20 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அறிவித்து உள்ளது.
அதன்படி, தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியாக ஐஸ்வர்யா நியமிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியாக ஆர்.அனாமிகா நியமனம். நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியாக எச்.ஆர்.கவுசிக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரியாக ஷபீர் ஆலம் நியமிக்கப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு – நாராயண சர்மா,
திண்டிவனம் -திவ்யான்சு நிகம்,
மேட்டூர் – பொன்மணி
பொள்ளாச்சி – கேத்தரீன் சரண்யா,
ஓசூர் – பிரியங்கா,
நாகை – குணால் யாதவ்
பொன்னேரி – வாகே சங்கெத் பல்வந்த்,
சேரன்மகாதேவி – அர்பித் ஜெயின்,
பரமக்குடி – அபில்ஷா கொவுர்
செய்யாறு – பல்லவி வர்மா,
பெரம்பலூர் – கோகுல்,
சிதம்பரம் – ராஷ்மி ராணி,
திருப்பூர் – சவும்யா ஆனந்த்