சென்னை: சென்னை புறநகர் பகுதிகளில், மழை வெள்ளப்பாதிப்புகளால் தொற்று நோய் பரவலை தடுக்க பிளிச்சிங் பவுடர் தூவப்பட்டது. ஆனால், அந்த பவுடரில் எந்தவொரு வாசனயும் எழவில்லை என்பதால், அதை ஆய்வு செய்த பொதுமக்கள், அது புரோட்டா, கேக் போன்ற உணவுப்பொருட்கள் செய்வதற்கான மைதா மாவு என்பதை கண்டறிந்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் வைலாகி வருகிறது.
இந்த முறைகேட்டுக்கு காரணம் யார் என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. திமுக அரசுமீது கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போது அணைநீர் ஆவியாகாமல் தடுக்க தெர்மோகோல் போடப்பட்ட விவகாரம் சர்ச்சையான நிலையில், அதை மிஞ்சும் வகையில் திமுக ஆட்சி செயல்பட்டுள்ளது என விமர்சிக்கப்பட்டு உள்ளது.
மிச்சாங் புயல், வெள்ளத்தால் சென்னை உள்பட அண்டைய மாவட்டங்களில் கடும் சேதம் ஏற்பட்டது. புயல் காரணமாக முறிந்த விழுந்த மரங்கள் மற்றும் மழைநீரை அகற்றும் பணி இன்னும் முற்றுப்பெறாத நிலையில், மழைநீர் வெளியேற்றப்பட்டு தூண்மைப்படுத்தப்பட்ட இடங்களில், தொற்று நோய்கள் பரவுவதை தடுக்க பிளிச்சிங் பவுடர் தூவப்பட்டு வருகிறது,
இந்த நிலையில், பல இடங்களில் தூய்மை பணிகளில் பிளீச்சிங் பவுடருக்கு பதில் மைதா மாவு தூவப்பட்டு உள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதுடன், வெள்ள நிவாரணத்திலும் ஊழல் செய்வதுதான் திராவிட மாடல் அரசின் லட்சனம் என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பகுதியிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டதும், இறுதியாக நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் சாலையோரங்கள் மற்றும் மழைநீர் தேங்கிய பகுதிகளில் தூய்மை பணியாளர்கள் பிளிச்சிங் பவுடர் தூவினர். ஆனால், இந்த பிளிச்சிங் பவுடரில் எந்தவொரு கெமிக்கல் வாசனையும் வராத நிலையில், அதை ஆய்வு செய்த பெண்கள் சிலர், அது புரோடா செய்யும் மைதா மாவு என்பதை கண்டறிந்னதர். இதையடுத்து, பிளிச்சிங் பவுடர் என தூவப்பட்டு வந்த சாக்கு மூட்டையினை , பார்த்தப்போது அது விசில் என்ற பெயரிலான மைதாமாவு மூட்டை என்பது கண்டறியப்பட்டது. அதில் இருந்ததும் மைதா மாவு என்பதும் தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், அதை படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இது வைரலாகி வருகிறது.
இதுகுறித்து விளக்கம் அளித்த அதிகாரிகள், செங்குன்றம் பகுதியில் தூய்மை பணிகளுக்கு மைதா மாவு பயன்படுத்தப்படவில்லை என தெரிவித்ததுடன், தூய்மை பணிகளில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர், மைதா மாவு பையில் ப்ளீச்சிங் பவுடர் மற்றும் சுண்ணாம்பு கலந்த பவுடரையே சாலையோரம் தூவியதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், பொதுமக்கள் அது பிளிச்சிங் பவுடரும் இல்லை, சுண்ணாம்பு பவுடரும் இல்லை, வெறும் மைதா மாவுதான் என்று கூறி வருகின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் வைகை ஆற்றின் ள தண்ணீரை ஆவி ஆகாமல் தடுக்க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெர்மாகோல் போட்டு மூடி செய்த சம்பவம் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், தற்போதைய திமுக அரசு, பிளிச்சிங் பவுடருக்கு பதில் மைதா மாவை உபயோகப்படுத்தி இருக்கும் செயல், திராவிட மாடல் அரசுக்கு ஒரு எடுத்துக்காட்டு என்று விமர்சனம் எழுந்துள்ளது.