தெலுங்கானா முதல்வராக ரேவந்த் ரெட்டி வியாழன் அன்று பதவி ஏற்றுக்கொண்டார். தவிர, அவருடன் 11 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர்.

இவர்களின் இலாகா விவரம் நேற்று வெளியானது :

பாட்டி விக்ரமார்கா (துணை முதல்வர், நிதித்துறை, மின்சாரம்),
உத்தம் குமார் ரெட்டி (தண்ணீர் வடிகால், சிவில் சப்ளைஸ்), கோமதி ரெட்டி வெங்கட் ரெட்டி (சாலை மற்றும் கட்டிடங்கள், திரைத்துறை), ஸ்ரீதர் பாபு (ஐடி, தொழில்கள், சட்டமன்ற விவகாரங்கள்),

சீதக்கா (பஞ்சாயத்துராஜ், ஊரக வளர்ச்சி, பெண்கள், குழந்தைகள் நலன்), பொன்னம் பிரபாகர் (போக்குவரத்துத் துறை, பி.சி. நலத் துறை), தாமோதர் ராஜநரசிம்மா (மருத்துவம், சுகாதாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை),

பொங்குலெட்டி ஸ்ரீனிவாஸ் ரெட்டி (வருவாய், வீட்டு வசதி, தகவல் துறை), தும்மலா நாகேஸ்வர ராவ் (வேளாண்மை, கைத்தறி, சார்பு நிறுவனங்கள்), ஜூபாலி கிருஷ்ணாராவ் (கலால், சுற்றுலா, தொல்லியல்) மற்றும் கோண்டா சுரேகா (வனம், தேவதாயா, சுற்றுச்சூழல்) ஆகிய துறைக்கு அமைச்சர்களாக பொறுப்பு வகிப்பார்கள்.

முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் நகராட்சி நிர்வாகம் & நகர்ப்புற மேம்பாடு (MA&UD), பொது நிர்வாகம், சட்டம் & ஒழுங்கு, தவிர மற்ற அனைத்து ஒதுக்கப்படாத துறைகளை கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவியேற்பை அடுத்து வெள்ளியன்று டெல்லி சென்ற தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அமைச்சரவை இலாகா குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதில் அமைச்சரவை விரிவாக்கம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும் மேலும் 6 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் விரைவில் ரேவந்த் ரெட்டியின் அமைச்சரவை விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிகிறது.