ட்டி

மேட்டுப்பாளையம் – ஊட்டி மலை ரயில் சேவை மேலும் இரு தினங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

தற்போது தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகத் தென் தமிழகப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது.

இதனால் நீலகிரி மாவட்டத்திற்குக் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மலை ரயில் சேவை மேலும் இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது இன்றும் நாளையும் மலை ரயில் சேவை இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மண் சரிவு ஏற்பட்டுக் கடந்த நவம்பர் 22-ஆம் தேதி முதல் மலை ரயில் சேவை இயக்கப்படாமல் இருந்தது. பிறகு பாதை சரிசெய்யப்பட்டு நேற்று முதல் மலை ரயில் சேவை தொடங்க இருந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக நேற்று மீண்டும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இந்த ரயில் சேவை மேலும் இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.