சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் செய்து வருகிறார். ஏற்கனவே இரு நாட்கள் மக்களை சந்தித்த நிலையில், இன்று 3வது நாளாக தென்சென்னையின் பல பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்து நிவாரண பணிகள் வழங்கினார்.
இன்று பம்மல், அனகாபுத்தூர், பொழிச்சலூர் பகுதிகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அப்பகுதியில் உள்ள மக்களுக்கு அரிசி, பருப்பு, பால், போர்வை உள்ளிட்ட நிவாரணப் பொருள்களையும் வழங்கினார்.
கடந்த 4ந்தேதி ஆந்திராவில் கரையை கடந்த மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னை உள்பட அண்டை மாவட்டங்களில் மழை கொட்டியது. மேலும் பலத்த சூறவாளி காற்றும் வீசியது. வரலாறு காணத அளவுக்கு பெய்த மழை காரணமாக சென்னை மீண்டும் வெள்ளத்தில் மிதந்தது. மக்கள் மீண்டும் சொல்லானா துயரத்தை சந்தித்தனர். தமிழ்நாடு அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினர். இந்த மழை காரணமாக சென்னையின் அனைத்து தொழில்களும் முடங்கின. பள்ளி, கல்லூரிகளி கடந்த 4 நாட்களாக மூடப்பட்டு உள்ளன. பல இடங்களில் மழைநீர் வடியாததால், மின்சார சப்ளை கொடுக்க முடியாத நிலை நீடிக்கிறது. இதனால், பல இடங்களில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மழை பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்த நிவாரண பணிகளை மேற்கொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் பல அமைச்சர்களை களமிறக்கினாலும், பல பகுதிகளில் தண்ணீர் வடியாத நிலை தொடர்கிறது.
இதைத்தொடர்ந்து புயலால் பாதித்த மக்களை முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக சென்று ஆய்வு நடத்தி நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார். நேற்று கொளத்தூர், பெரம்பூர் பகுதிகளில் ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின், இன்று தென்சென்னை பகுதிகளில் நேரடியாக ஆய்வு செய்து நிவாரண பணிகளை வழங்கினார்.
பம்மல், அனகாபுத்தூர், பொழிச்சலூர் பகுதிகளை நேரில் ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அப்பகுதியில் உள்ள மக்களுக்கு அரிசி, பருப்பு, பால், போர்வை உள்ளிட்ட நிவாரணப் பொருள்களையும் வழங்கினார். அவருடன் அமைச்சர்கள் அதிகாரிகள் உடனிருந்தனர்.