டெல்லி: தமிழ்நாட்டுக்கு டிசம்பர் முதல் வரும் 5ம் தேதி வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவாகியுள்ள புயலுக்கு ‘மிக்ஜாம்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த புயல் சென்னை மற்றும் மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மிக்ஜாம் புயல் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா இடையே கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாதாலும், தற்போது மிக்ஜாம் புயல் சென்னையில் இருந்து 800 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. சென்னை அருகே புயல் கரையை கடப்பது உறுதி செய்யப்பட்டால் சென்னைக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எச்சரித்துள்ளது. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், இதனால் டிசம்பர் 3ந்தேதி மற்றும் 4ம் தேதிகளில் வட தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால், 2ந்தேதி முதல் 5ம் தேதி வரை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
–