இந்தியாவில் இருந்து மலேசியா செல்ல டிசம்பர் முதல் விசா தேவையில்லை என்று மலேசிய பிரதமர் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்தார்.
இந்தியா மற்றும் சீனாவில் இருந்து மலேசியா-வுக்கு வரும் பயணிகளுக்கு 30 நாட்கள் வரை அங்கு தங்குவதற்கு விசா தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பான புதிய விசா நடைமுறைகளை அந்நாட்டு அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
அனைத்து இந்தியப் பயணிகளுக்கும் 1 டிசம்பர் 2023 முதல் 31 டிசம்பர் 2024 வரை மலேசியாவிற்கு விசா இல்லாத நுழைவு இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
விசா இல்லாமல் பயணிக்க குறைந்தது 6 மாத காலம் செல்லக்கூடிய பாஸ்போர்ட், மலேசியா சென்று திரும்புவதற்கான விமான டிக்கெட்டுகள், ஹோட்டல் முன்பதிவு மற்றும் தேவையான நிதி ஆதாரம் இருப்பது அவசியம் என்று அறிவித்துள்ளது.
இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒவ்வொரு முறை மலேசியா செல்லும் போதும் 30 நாட்கள் வரை விசா இல்லாமல் தங்கியிருக்க அனுமதி வழங்கப்படும்.
தேவையான ஆவணங்களை மலேசியா டிஜிட்டல் வருகை அட்டை (MDAC) https://imigresen-online.imi.gov.my/mdac/main என்ற இணையதளத்தில் பதிவு செய்யவேண்டியது அவசியம்.
விமானம், கப்பல் மற்றும் தரை வழியாக மலேசியா செல்லும் இந்தியர்கள் அந்நாட்டு குடிவரவு அதிகாரிகள் பாதுகாப்புத் திரையிடல் மற்றும் குடியேற்ற அனுமதி மேற்கொண்டு அதற்கான அனுமதி வழங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து மலேசியா செல்ல டிசம்பர் முதல் விசா தேவையில்லை