சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 19 மாவட்டங்களில் மழை பெய்யலாம் என அறிவித்துள்ளது.

தென் மேற்கு பருவமழை வலுத்து வருவதால் தமிழகத்தில் மழை அதிகரித்து வருகிறது.  இன்று தலைநகர் சென்னையில் காலை முதல் விடாமல் மழை பெய்து வருவதால் மக்கல் கடும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 19 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.

அதாவது திருவள்ளூர், ராணிப்பேட்டை,வேலூர், திருப்பத்தூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மதுரை, சிவகங்கை, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி,விருதுநகர், தேனி, திண்டுக்கல், நீலகிரி ஆகிய 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.