அருள்மிகு ஸ்ரீநிவாசப்பெருமாள் திருக்கோயில், திருவண்ணாமலை, , விருதுநகர் மாவட்டம்.

இத்தலம் தென்திருப்பதி என்றழைக்கப்படுகிறது. திருப்பதி வேங்கடாசலபதியே வேட்டைக்கு வந்ததாகவும் பக்தர்களைக் காக்கவேண்டி இம்மலையில் திருக்கோயில் கொண்டதாயும் புராணம் கூறுகின்றது. மிகவும் வரப்பிரஸாதியாய்க் கருதப்படுகிறார். ஆதிசேஷனே ஒரு பர்வத வடிவமாகத் தோற்றமளிக்கிறார். அதில் பக்தர்களைக் காக்கும் பொருட்டு திருவேங்கடமுடயனாகத் தானே தோன்றி நிற்கிறார்.
சகல ஜனங்களுக்கு அவரவர் விரும்பும் பலன்களைக் கொடுத்துக் கொடுத்து எழுந்தருளி உள்ளார். அம்மலையின் அடிவாரத்தில் தாமரை முதலிய மலர்கள் நிறைந்த பம்பை என்கிற புண்ணிய தீர்த்தமும் உள்ளது. அது சகல பாவத்தையும் போக்கி சகல விருப்பத்தையும் கொடுக்க வல்ல மகிமையுடையது. அதை கோனேரி தீர்த்தம் என்றும் அழைப்பார்கள். திருப்பதிக்குச் செல்ல முடியாதவர்கள் இங்கு நேர்த்திக்கடன் செலுத்தலாம். மலை மீது அமைந்துள்ள கோயிலின் அழகு தோற்றம் காண்போரை வியக்க வைக்கும் அழகுடையது. கோயிலுக்கு முன்பாக உள்ள தடாகம் அற்புதமாக உள்ளது.
கோரிக்கைகள்:
திருமண காரியம், குழந்தை பாக்கியம், வியாபார விருத்தி, விவசாய செழிப்பு ஆகியவற்றுக்காகவும் இத்தலத்துக்குப் பக்தர்கள் பெருமளவில் வருகின்றனர். இவை தவிர உத்தியோக உயர்வு வேண்டுவோர் இத்தலத்தில் வேண்டிக்கொண்டால் கண்டிப்பாக நடப்பதாகக் கூறுகிறார்கள்.
நேர்த்திக்கடன்:
முடி இறக்குதல், கால்நடைகள் தானம் தருதல் காணிக்கையாக ஆடு, மாடுகளும் பொன்னாலும், வெள்ளியாலும் செய்யப்பட்ட பலகார உருப்படிகள், பாத்திரங்கள், பரிவட்டங்கள், பணம் முதலியன செலுத்தப்படுகின்றன.
Patrikai.com official YouTube Channel