டெல்லி: தமிழ்நாடு அரசு சார்பில் ஆளுநர் மீது தொடரப்பட்டுள்ள வழக்கின் 2வது கட்ட விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டை ஆட்சி செய்து வரும திமுக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதன் காரணமாக, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இருந்து வந்தது. இதை கண்டித்து, ஆளுநர் ஒப்புதல் வழங்க உத்தரவிட வேண்டும் என கூறி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுமீதான விசாரணை தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வில் கடந்த நவம்பர் 10ம் தேதி விசாரிக்கப்பட்டது. அப்போது, சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 12 மசோதாக்களுக்கு ஆளுநர் கையெழுத்திடாமல் கிடப்பில் போட்டு வைத்திருந்ததாக தமிழ்நாடு அரசு குற்றம் சாட்டியது. மனுக்களை கிடப்பில் போட்டு அரசின் செயல்பாடுகளை ஆளுநர் முடக்கி வைக்கிறார் என்றும் பணி நியமனம் தொடங்கி எந்த ஒரு கோப்புகளுக்கும் அனுமதி கொடுக்க ஆளுநர் மறுப்பு தெரிவிக்க வேண்டும் தமிழ்நாடு அரசு குற்றம் சாட்டியிருந்தது.
இந்த விஷயத்தில் ஆளுநரை சாடிய உச்சநீதிமன்றம், ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல என்று கூறியதுடன், தமிழ்நாடு அரசு எழுப்பி பிரச்சினைகள் கவலைக்குரியது என்று நீதிபதிகளுக்கு அரசு தெரிவித்த நிலையில் ஆளுநர் ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கலாம், ஒருவேளை அது நிதி மசோதாவாக இல்லாமல் இருந்தால் முடிவை நிறுத்தி வைக்கலாம் அல்லது அதில் திருத்தம் மேற்கொள்ள பரிந்துரைக்கலாம், ஆனால், ஆனால் எதுவுமே செய்யாமல் கிடப்பில் போட முடியாது அரசியல் சாசனப்படி மசோதாக்கள் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டவுடன் ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் தெரிவித்தனர்.
இதையடுத்து ஆளுநர் தரப்பில் இருந்த 12 மசோதாக்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்காக தமிழ்நாடு அரசு சிறப்பு பேரவை கூட்டத்தை கூட்டி, மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி உள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு அரசு மீதான வழக்கு இன்று மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.