டில்லி
வரும் 22 ஆம் தேதி அன்று காணொளி காட்சி வழியாக ஜி 20 மாநாடு நடைபெற உள்ளது.
டில்லியில் கடந்த செப்டம்பர் மாதம் 9 மற்றும் 10ஆம் தேதிகளில், ஜி20 உச்சி மாநாடு மிகச்சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த மாநாட்டில் உலக நாடுகளுடனான வெளியுறவுக் கொள்கையில், இந்தியாவின் தனிச்சிறப்பும், தலைமைத்துவமும் நிரூபிக்கப்பட்டது. வெளிநாட்டு ஊடகங்கள் இந்தியாவை இந்த மாநாட்டுக்காக பாராட்டின.
பிரதமர் மோடிக்கு ஜி20 மாநாட்டைச் சிறப்பாக நடத்தி முடித்து, உலக நாடுகள் மத்தியில் தனது தலைமைப் பண்பை நிரூபித்துக் காட்டியதற்காக வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மாநாட்டில் புவி வெப்பமயமாதல், பாலின சமத்துவம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்தியா தலைமையில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாடு நிறைவடைந்த நிலையில் அடுத்த ஆண்டுக்கான ஜி-20 தலைமை பொறுப்பு பிரேசில் வசம் ஒப்படைக்கப்பட்டது. அடுத்த ஆண்டுக்கான ஜி-20 உச்சி மாநாடு பிரேசில் நாட்டில் நடைபெற உள்ளது. இந்தியாவின் சார்பில் வரும் 22ம் தேதி ஜி 20 நாடுகளின் மாநாடு காணொளி காட்சி வாயிலாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.