பெங்களூரு
கர்நாடகாவில் ஆலும் கட்சியான காங்கிரசில் பிளவு ஏற்படுத்த ம ஜ த தலைவர் குமாரசாமி முயல்வதாக தகவல்கள் கூறுகின்றன.

காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் சட்டசபைத் தேர்தலில் மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. முதல்வராக வருவதில் சித்தராமையா மற்றும் டி.கே. சிவக்குமார் இடையே போட்டி காணப்பட்டது. டில்லியில் இரு தலைவர்களும் முகாமிட்டு கட்சியின் உயர்மட்ட தலைவர்களை அடுத்தடுத்து சந்தித்தனர்.
பிறகு கட்சி மேலிட முடிவின்படி, கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவி வகிக்கிறார். துணை முதல்வரால டி.கே. சிவக்குமார் உள்ளார். இந்த அரசு பல மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.
நேற்று கர்நாட்க முன்னாள் முதல்வர் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரான குமாரசாமி பெங்களூருவில் செய்தியாளர்களிடம்
”கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், முதல்வராவதற்கு விரும்பினால், எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவையும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்
காங்கிரசில் உள்ள நிலைமையைப் பார்க்கும்போது, அக்கட்சியில் எத்தனை பேர் முதல்வராவதற்கு விருப்பத்துடன் உள்ளனர் என்பது பற்றி எனக்கு தெரியாது.”
என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் காங்கிரசில் இணைவதற்குத் தயாராக உள்ளனர் என பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள் கூறி வந்துள்ளனர். எனவே குமாரசாமி அதற்குப் பதிலடியாகக் காங்கிரசை பிளக்க முயன்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
[youtube-feed feed=1]