கொல்கத்தா

மேற்கு வங்க அமைச்சர் ஜோதிபிரியா மாலிக் ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்பு மேற்கு வங்க உணவுத்துறை அமைச்சராக இருந்த ஜோதிவாரியா மாலிக் தற்போது சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரியாக உள்ளார்., திரிணாமூல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான ஜோதிபிரியா மாலிக், முன்பு உணவுத்துறை மந்திரியாக இருந்த சமயத்தில் ரேஷன் பொருள் வினியோகத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையொட்டி அமலாக்கத்துறை வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது. விசாரணையின் அடிப்படையில் கடந்த 14-ந்தேதி தொழில் அதிபர் பாகிபுர் ரகுமான் என்பவரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். அவருக்கு நெருக்கமாக இருந்த அமைச்சர் ஜோதிபிரியா வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

சோதனையைத் தொடர்ந்து அமைச்சர் ஜோதிபிரியா மாலிக்கிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அவரை அதிரடியாகக் கைது செய்தனர். ஜோதிபிரியா மாலிக் கைதுக்கு மேற்கு வங்க முதல்-மந்திரியும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்து உள்ளார்.