சென்னை

ன்று அவசரநிலை, பேரிடர் குறித்து செல்போன் மூலம் எச்சரிக்கும் புதிய திட்டத்தின் சோதனை நடைபெற உள்ளது.

இன்று தமிழக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையமும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையமும் மத்திய அரசின் தொலைத்தொடர்பு துறையுடன் இணைந்து, பேரிடர்களின் போது அவசரக் கால தகவல் தொடர்புகளை மேம்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் ”செல் ஒலிபரப்பு எச்சரிக்கை” சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.

இந்த ”செல் ஒலிபரப்பு எச்சரிக்கை” முறை என்பது ஒரு அதிநவீன தொழில்நுட்பமாகும். இந்த தொஐல் நுட்பத்தில் ஒரு செல்போன் கோபுரத்தின் குறிப்பிட்ட எல்லைக்குள் உள்ள அனைத்து செல்போன்களுக்கும், இயற்கை இடர்பாடு குறித்த எச்சரிக்கைகள் ஒரே நேரத்தில் சென்றடையக்கூடிய வசதி உள்ளது.

இதன் மூலம் சுனாமி, மழை, வெள்ளம், பூகம்பம் போன்ற கடுமையான வானிலை எச்சரிக்கைகள், பொது பாதுகாப்பு செய்திகள், வெளியேற்ற அறிவிப்புகள் மற்றும் பிற அவசரக்கால எச்சரிக்கைகளை வழங்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும் பேரிடர் எச்சரிக்கை தகவல்கள், சாத்தியமான அச்சுறுத்தல்கள் மற்றும் நெருக்கடியான சூழ்நிலைகளைப் பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் பரவலாக தெரிவிக்க இது  பயன்படுத்தப்பட உள்ளது.

இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பொதுமக்களின் பாதுகாப்பில் தொடர்ச்சியான உறுதிப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், ஒவ்வொரு தொலைத்தொடர்பு சேவை வழங்குநரிடமும் ”செல் ஒலிபரப்பு எச்சரிக்கை” அமைப்பின் சோதனையை நடத்த உள்ளது.

இந்த தகவல் தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.