சென்னை
சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்துக்குத் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மழை பெய்யலாம் என அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (06.10.2023) முதல் 11-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்து இருந்தது.
தற்போது தமிழகத்தின் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதாவது விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.