சென்னை
இன்று தமிழகம் முழுவதும் வார இறுதி நாளை முன்னிட்டு 600 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
நேற்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் ஒரு செய்திக் குறிப்பை வெளியிடப்பட்டுள்ளார்.
அந்த செய்திக்குறிப்பில்,
“7-10-2023 (சனிக்கிழமை, நாளை) மற்றும் 8-10-2023 (ஞாயிறு) ஆகிய விடுமுறை நாட்களை முன்னிட்டு 6-10-2023 அன்று (இன்று) சென்னையில் இருந்தும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாகச் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு 6-10-2023 அன்று (இன்று) தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகளும் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து அதாவது கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் போன்ற இடங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூருவில் இருந்து பிற இடங்களுக்கும் 300 சிறப்பு பேருந்துகளும் ஆக மொத்தம் 600 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில் பயணம் மேற்கொள்வதற்கு இதுவரை 5,896 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்.”
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.