சென்னை: விடுதி மாணவர்களின் உணவு உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும்” என மாவட்ட ஆட்சியர் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின்  தலைமையில் தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நேற்று  இரண்டாவது நாளாக நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாட்டில் நிறைவு உரையாற்றினார். அப்போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன்படி,  அரசுப் பள்ளி விடுதி மாணவர்களுக்கான உணவு உதவித் தொகை ரூ.1,000லிருந்து ரூ.1,400 ஆகவும், அரசு கல்லூரி விடுதி மாணவர்களுக்கான உணவு உதவித் தொகை ரூ.1,100ல் இருந்து ரூ.1,500 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.