கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

கடந்த சில நாட்களாகக் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் இங்குள்ள மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர். குறிப்பாக நேற்று இரவு இங்கு தொடர்ந்து கனமழை பெய்தது.
இந்த கனமழையால் மாவட்டத்தில் பெரும் பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடிய வண்ணம் உள்ளது. இந்த கன மழை மற்றும் வெள்ளத்தினால் மக்கள் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை இன்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel