அக்டோபர் 1 (நாளை) முதல் சூப்பர் பாஸ்ட் ரயில்களின் பயண நேரம் அதிகரிக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைகை, பாண்டியன், பொதிகை, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், முத்துநகர், நெல்லை எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களின் பயண நேரம் அதிகரித்துள்ளது ரயில்வே இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அட்டவணை மூலம் தெரியவந்துள்ளது.
நாளை முதல் சென்னை – மதுரை மார்கத்தில் செல்லும் ரயில்களின் நேரம் தவிர மதுரையில் இருந்து கோவை உள்ளிட்ட பிற வழித்தடங்களில் செல்லும் ரயில்களின் நேரமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
வைகை எக்ஸ்பிரஸ் இனி காலை 7:10க்கு பதிலாக 6:40க்கு மதுரையில் புறப்பட்டு பிற்பகல் 2:10க்கு சென்னை வந்தடையும். இது ஏற்கனவே பிற்பல் 2:25 மணிக்கு சென்னை வந்தது. இதன் மூலம் அக்டோபர் 1 முதல் சென்னை – மதுரை இடையிலான பயண நேரம் மேலும் 15 நிமிடம் அதிகரித்துள்ளது.
வந்தே பாரத், சதாப்தி உள்ளிட்ட குறைந்த நிறுத்தங்களில் நிற்கும் அதிவிரைவு சொகுசு ரயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் பயணிகள் கூறிவருகின்றனர்.
சதாப்தி ரயில் அறிமுகப்படுத்தப்பட்ட பின் கோவை எக்ஸ்பிரஸ், பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் மற்றும் லால்பாக் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களின் நேரம் ஏற்கனவே அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வழித்தடத்தில் மேலும் ஒரு பிரீமியம் ரயிலான வந்தே பாரத் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் இந்த வழித்தடத்தில் செல்லும் மற்ற ரயில்கள் அனைத்தும் செல்வதாக புகார்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மதுரை மார்க்கமாக செல்லும் ரயில்களின் நேரம் அதிகாரபூர்வமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
ரயில் தடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் அதே பாதையில் குறைந்த நேர இடைவெளியில் ரயில்களின் எண்ணிக்கை மட்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்களை விட பலமடங்கு அதிக கட்டணம் உள்ள பிரீமியம் ரயில்களான வந்தேபாரத், சதாப்தி, தேஜஸ் ரயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் இந்த முயற்சியில் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.