தருமபுரி: டெங்கு காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. பருவகால மழை முடிந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே மழைநீர் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தேங்கும் தண்ணீரிலிருந்து டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகிறது. ஏடிஎஸ் கொசுக்களால் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது.
டெங்கு காய்ச்சலுக்கு ஏற்கனேவே சென்னை அரகே சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் பல மாவட்டங்களில் குழந்தைகள் உயிரிழந்து வருகின்றனர். அரியலுார் மாவட்டம், தா.பழூரை சேர்ந்த, 60 வயது முதியவர், தா.பழூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், சேர்த்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதை தடுக்க மாநில சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில், வரும் ஞாயிறன்று (அக் 1ந்தேதி) சிறப்பு மருத்துவமனை முகாம்களை நடத்துகிறது.
இந்த நிலையில், திருப்பத்தூர் அருகே டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சிவராஜ் பேட்டை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (45) மற்றும் சுமித்ரா(35) ஆகிய தம்பதியினருக்கு பிரித்திகா (15) தாரணி (13) யோகலட்சுமி (7) அபிநிதி(5) புருஷோத்தமன் எட்டு மாத கைக்குழந்தை என ஐந்து பிள்ளைகள் உள்ளன. இந்த நிலையில் யோகலட்சுமி அபிநிதி புருஷோத்தமன் ஆகிய குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு கடந்த 23ஆம் தேதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்ததினர். இந்த நிலையில் யோகலட்சுமி மட்டும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து தற்போது பெங்களூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து அபிநிதி மற்றும் புருஷோத்தமன் ஆகிய இரண்டு குழந்தைகளும் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கடந்த 26 ஆம் தேதி மேல் சிகிச்சைக்காக மாற்றம் செய்யப்பட்டார் இந்த நிலையில் நேற்று இரவு அபிநிதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் புருஷோத்தமன் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திருப்பத்தூர் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு ஒரு பெண் குழந்தை உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெங்கு தீவிரம்: தமிழகம் முழுவதும் அக்டோபர் 1ந்தேதி 1000 சிறப்பு மருத்துவ முகாம்!