சென்னை

திமுக நிர்வாகிகளுக்கு பாஜக குறித்து கருத்துச் சொல்ல அக்கட்சித் தலைமை தடை விதித்து வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது.

நேற்று முன் தினம் பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்துக்கொண்டது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளுக்கு சில வாய்மொழி உத்தரவும் போடப்பட்டுள்ளது. அதன்படி கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள செய்தி தொடர்பாளர்கள், ஒரு சில நிர்வாகிகளைத் தவிர வேறுயாரும் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொண்டோ அல்லது பொது வெளியிலோ கருத்து தெரிவிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக- பாஜக இடையில் மோதல் உச்சத்தை எட்டிய நிலையில்தான் இந்த கூட்டணி முறிவு ஏற்பட்டுள்ளது. ஆகவே இதற்கு பிறகும் பாஜக குறித்தோ, அக்கட்சித் தலைவர்கள் குறித்தோ கருத்து தெரிவித்தால், அது மேலும் பிரச்சினைகளை உருவாக்கும் என்று கட்சி மேலிடம் கருதுகிறது எனக் கூறப்படுகிறது.