ட்டாவா

ந்தியா காலிஸ்தான் விவகாரத்தில் கனடாவுடன் இணைந்து செயல்படக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்துள்ளார்.

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜர் கனடாவில் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்தியா-கனடா இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. நிஜ்ஜர் கொலையில் விசாரணை மற்றும் நீதி வழங்கப்படுவதற்குக் கனடாவுடன் இணைந்து செயல்படுமாறு இந்தியாவுக்கு அந்த நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்து உள்ளார்.

நேற்று அவர் செய்தியாளர்களிடம்,

”நிஜ்ஜர் கொலை விவகாரத்தை இந்திய அரசு தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும்., இந்த விவகாரத்தில் முழு வெளிப்படைத்தன்மையை வெளிப்படுத்தவும், பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை உறுதிப்படுத்தவும் எங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்”

எனக் கூறினார்.

அப்போது இந்தியாவின் விசா ரத்து நடவடிக்கை குறித்த கேள்விக்கு,

”நமது நாடு சட்டத்தின் ஆட்சி நடைபெறும் நாடு. நாங்கள் கனடிய குடிமக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும், நமது மதிப்புகள் மற்றும் சர்வதேச விதிகள் அடிப்படையிலான ஒழுங்கை நிலை நிறுத்தவும் தேவையான பணிகளைத் தொடர்ந்து செய்வோம். எங்கள் கவனம் இப்போது அது மட்டும் தான்”

என்று பதில் அளித்தார்.