ழனி

ழனிமலையில் உள்ள முருகன் கோவிலில் மொபைல்கள் மற்றும் வீடியோ சாதனங்களுக்குத் தடை விதிக்கப்பட உள்ளனது. 

பழனிமலைக் கோவில் தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடாகும் இந்த  பழனி முருகன் கோவிலுக்குத் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.

தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் படிப்பாதை, மின் இழுவை ரயில், ரோப்கார் மூலம் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்குச் சென்று வருகின்றனர்.  பழனியில் வாரவிடுமுறை, முகூர்த்தம் உள்ளிட்ட நாட்களில் பக்தர்கள் வருகை இருமடங்கு காணப்படுவது வழக்கம்.  அதிலும் வாரவிடுமுறை நாளில் வெளியூர், வெளிமாநில பக்தர்கள் அதிக அளவில் வருகை புரிகின்றனர்.

தற்போது பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி பழனி முருகன் கோவிலில் மொபைல்கள், வீடியோ சாதனங்களுக்கு அக்டோபர் 1ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவில் நிர்வாகம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் படிப்பாதை, விஞ்ச் கார் மற்றும் ரோப் கார் பகுதிகளில் மொபைல்களை பாதுகாப்பு மையங்களில் ரூ.5 செலுத்தி வைத்துச்செல்லலாம் என்றும், தரிசனத்திற்கு பிறகு மையங்களில் தங்களுடைய மொபைல்களை பெற்றுச்செல்லலாம் என்றும் தெரிவித்துள்ளது.