ரியோ: பிரேசிலில் நடைபெற்ற உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துகொண்ட தமிழ்நாட்டைச்சேர்ந்த இந்திய வீராங்கனை இளவேனில் (10 மீ., ‘ஏர் ரைபிள்’) தங்கம் வென்றார். இது இவர் பெற்றுள்ள இரண்டாவது தங்கம் என்பது பெருமைக்குரியது
இளவேனில் வாலறிவன் (Elavenil Valarivan), தமிழ்நாடு, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தற்போது 24 வயதாகும் இளவேனில், குறி பார்த்துச் சுடும் வீராங்கனை ஆவார். இவர் ஏற்கனவே கடந்த 2019 பன்னாட்டு துப்பாக்கிச் சூட்டு விளையாட்டு அமைப்பின் 2019 உலகக்கிண்ணப் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடி தங்கப் பதக்கத்தை வென்றார். மேலும் ஏராளமான பதக்கங்களை குவித்துள்ளார்.
இந்த நிலையில், பிரேசில் தலைநகர் ரியோவில் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலந்துகொண்டடார். அங்கு நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில், தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவன் முதலிடத்தை பிடித்து தங்கத்தை சென்றார்.
இது அவருக்கு கிடைத்துள்ள இரண்டாவது தங்கப் பதக்கம். ஏற்கனவே ஆகஸ்ட் 2019 இல் ரியோ டி ஜெனிரோவில் தனது முதல் சீனியர் உலகக் கோப்பை தங்கத்தையும் வென்ற நிலையில், தற்போது மீண்டும் உலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
முன்னதாக, பெண்களுக்கான தனிநபர் 10 மீ., ‘ஏர் ரைபிள்’ பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் இளவேனில் வளரிவன், 630.5 புள்ளிகளுடன் 8வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேறினார். அடுத்து நடந்த பைனலில் அசத்திய இளவேனில், 252.2 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
வீராங்கனை இளவேனிலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.