சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், மழை வெள்ளம், மழைநீர் வடிகால் , மழை பாதுகாப்பு உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில்,  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மருத்துவ கட்டமைப்புகளும் தயார் நிலை யில் இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், பல பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் பலமுறை நேரில் சென்று ஆய்வு நடத்தியதுடன்,  விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தி வந்தார்.

இதையடுத்து, bசன்னையில் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்கவும்  சென்னை மாநகராட்சிக்கு தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். ,தன்காரணமாக, ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து பணிகளை மேற்கொள்ளமாறு வலியுறுத்தி உள்ளனர்.

இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சரின் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடைபெறுகிறது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ,பல்வேறு துறை செயலாளர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஆலோசனையில் பங்கேற்க உள்ளனர்..

சென்னையில்  பருவமழை காலங்களின் போது குடியிருப்பு பகுதிகளிலும், பிரதான சாலைகளிலும் மழை நீர் தேங்கி, பொதுமக்களுக்கு கடுமையாக பாதிப்பை ஏற்படுத்தியது. இதை தடுக்க பல நூறு கோடி ரூபாயில் மதிப்பில், மழைநீர் வடிகால் பணிகள் கடந்த இரு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதனால், பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் பாதிப்பு தடுக்கப்பட்டு உள்ளது.  மேலும் பல இடங்களில் மழை  பாதிப்பு ஏற்படாமல் இருக்க   கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் கடந்த வருடம் பருவமழைக்கு முன்னதாக  முடிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.