சென்னை
விநாயகர் சதுர்த்தி மற்றும் வார இறுதி விடுமுறையையொட்டி இன்று சென்னையில் இருந்து 650 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
வரும் 18 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது., விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மக்கள் சொந்த ஊருக்குச் செல்ல ஏதுவாக தமிழகம் முழுவதும் 1,250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனத் தமிழக போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இதில் வார இறுதி நாளான சனிக்கிழமை (16/09/2023) மற்றும் ஞாயிற்றுக் கிழமை சுபமுகூர்த்த (17/09/2023) நாட்களைத் தொடர்ந்து, விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு 18/09/2023 அன்று திங்கட்கிழமை அரசு விடுமுறை தினம் என்பதால் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் மற்றும் சுபநிகழ்ச்சிகளுக்கும் சென்று வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே இதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாகச் சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி பயணிகள் எந்தவித சிரமமும் இன்றி பயணம் மேற்கொள்ள ஏதுவாக சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு இன்று தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 650 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.