சென்னை
திடீரென கனமழை பெய்ததால் சென்னையில் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன.

நேற்று இரவு சென்னையில் திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. குறிப்பாக கிண்டி, மீனம்பாக்கம் பகுதிகளில் காற்று வேகமாக வீசியதுடன், கனமழை கடுமையாகப் பெய்தது. இந்த. கனமழையால் பல்வேறு சாலைகளில் தண்ணீர் தேங்கியது.
இதையொட்டி வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர் கனமழை எதிரொலியாகச் சென்னையில் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன. இதில் சென்னை விமான நிலையத்தில் 6 சர்வதேச விமானங்கள் உட்பட 16 விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன.
பயணிகள் இதனால் கடும் அவதி அடைந்தனர். விஜயவாடாவில் இருந்து 64 பயணிகளுடன் வந்த பயணிகள் விமானம், சென்னையில் தரையிறங்க முடியாமல், திருச்சிக்குத் திருப்பி அனுப்பப்பட்டது.
Patrikai.com official YouTube Channel