சென்னை: துணைவேந்தர் நியமன விவகாரத்தில்,  ஆளுநர் அறிக்கையை சட்டப்படி எதிர்கொள்வோம்  அமைச்சர் பொன்முடி  அறிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில்  சென்னை பல்கலைக்கழகம் உள்பட மூன்று பல்கலைக்கழகங்களில் உள்ள துணைவேந்தர் பதவி பல மாதங்களாக காலியாக உள்ளது. இதற்கு துணைவேந்தர் நியமனம் செய்வதில் அரசுக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.

இந்த நிலையில் துணைவேந்தருக்கான தேடுதல் குழு அமைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அதன்படி,   கர்நாடகா மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் பட்டு சத்தியநாராயணா தலைமையில் சென்னை பல்கலைக்கழக துணை வேந்தரை தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதுபோல, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தரை தேர்வு செய்ய பல்கலைக்கழக மானியக் குழு உறுப்பினர் சுஷ்மா யாதவா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தரை தேர்வு செய்ய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக 3 உறுப்பினர்கள் கொண்ட தேர்வு குழு அமைக்கப்படும் நிலையில் தற்போது 4 உறுப்பினர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக பல்கலைக்கழக மானிய குழு சார்பில் உறுப்பினர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி,  பல்கலைக்கழகங்க துணைவேந்தர் பதவிக்கு தேடுதல் குழு அமைத்து ஆளுநர் அறிவித்துள்ளார். ஆளுநர் வெளியிட்ட அறிக்கையை அரசு சட்டப்படி எதிர்கொள்ளும் என்றவர்,  துணைவேந்தரை தேர்வு செய்ய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

அரசியல் சாசனப்படி, மாநில பல்கலைக்கழகங்களில், மாநில அரசே துணைவேந்தரை நியமிக்க மாநில ஆளுநருக்கே அதிகாரம் உள்ளது. அதை மாற்றக்கோரி மாநில அரசுகள் போர்க்கொடி தூக்கி வருகின்றன. இதுதொடர்பாக தமிழ்நாடு உள்பட பல மாநிலங்களில்,  பல்கலைக்கழக சட்டங்களில் திருத்தம் கொண்டு வரும் சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு,  மாநில ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும்,  சட்டப்பேரவையில்  உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இதுதொடர்பான சட்ட முன்வடிவை கடந்த அண்டு (2022) ஏப்ரல் 25ந்தேதி தாக்கல் செய்தார். இந்த சட்ட முன்வடிவுக்கு இதுவரை கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை.

கவர்னரின் ஒப்புதலின்றி துணைவேந்தர் நியமனம் செல்லாது! மேற்குவங்க முதல்வருக்கு குட்டு வைத்த உச்சநீதிமன்றம்…