நாகப்பட்டினம்: அரசுமுறை பயணமாக நாகை சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று காலை , நாகப்பட்டினம், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்து வருகிறார். அப்போது பொதுமக்களை சந்திப்பதடன், ஆட்சியர்களுடனும், அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தி, அரசு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்,. சமீபத்தில் ராமநாதபுரம் மாவட்டத்திற்குச் சென்ற அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியிருந்தார்.
இதைத்தொடர்ந்து, தற்போது, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் 4 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அதற்காக 24ந்தேதி காலை 9 மணிக்குச் சென்னை விமான நிலையத்திலிருந்து திருச்சிக்குச் செல்கிறார். பின்னர் அங்கிருந்து கும்பகோணம் சாலை மார்க்கமாகச் சென்ற முதல்வர் திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார். அந்த பயணத்தின் போது பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, நலத் திட்டங்களையும் தொடங்கி வைத்தார். நேற்று (25ந்தேதி) மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் விரிவாக்கத்தை மறைந்த முதல்வர் கருணாநிதி படித்த திருக்குவளை அரசு பள்ளியில் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இந்த நிலையில், இன்று காலை நாகப்பட்டின் ஆட்சி அலுவலகத்தில் நாகப்பட்டினம், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கு நிலவரம், அரசு பணிகள் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குகுறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் டிஜிபி சங்கர் ஜிவால், உள்துறை செயலாளர், நான்கு மாவட்ட கலெக்டர்கள், தஞ்சாவூர் சரக டிஐஜி, மாவட்ட எஸ்.பி.,க்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.