வாஷிங்டன்

மெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் தேர்தல் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு அட்லாண்டா, அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு டொன்ல்டு டிரம்ப் வெற்றி பெற்றார். டிரம்ப் ஆட்சியில் இருந்தபோது அவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் எழுந்தன.

கடந்த 2020 ஆம் அண்டு ஜார்ஜியா மாகாணத்தில் நடந்த தேர்தலில் மோசடி செய்ததாக அவர் மீது புகார் கூறப்பட்டது. தேர்தல் முடிவுகளை முறைகேடாக மாற்ற முயன்றதாக டிரம்ப் உள்ளிட்ட 18 பேர் மீது மோசடி வழக்கு பதியப்பட்டு வழக்கு விசாரணை ஜார்ஜியாவின் அட்லாண்டா நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன.

நீதிமன்றம்  குற்றப்பத்திரிகையில் உள்ள 19 பேரிடமும் ஒரே நேரத்தில் விசாரணை நடத்த முடிவு செய்தது.  ஆகவே டிரம்ப் உள்பட வழக்கில் தொடர்புடைய 19 பேருக்கும் கைது வாரண்டு பிறப்பித்த நீதிமன்றம் இன்றைக்குள் அவர்கள் தாமாக முன்வந்து ஆஜராகவும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

தற்போது ஜார்ஜியா தேர்தல் மோசடி வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொன்ல்டு டிரம்ப் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. டிரம்ப் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியானால் 20 ஆண்டுகள்வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனத் தெரிகிறது.  அத்துடன் அவர் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பையும் இழக்க நேரிடலாம்.