சென்னை: நாகை, திருவாரூர் மாவட்டத்தில் 4 நாள் அரசுமுறை பயணம் மேற்கொள்ளும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முற்பகல் விமானம் மூலம் திருச்சிக்கு புறப்பட்டார். இன்று தருமபுர ஆதினம் கலைக்கல்லூரி விழாவில் கலந்துகொள்கிறார்.
திருச்சி சென்ற முதலமைச்சருக்கு திருச்சி விமான நிலையத்தில் அமைச்சர் நேரு தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கார் மூலம் கும்பகோணம் சென்று ஓய்வெடுக்கும் முதல்வர் ஸ்டாலின், மாலை திருவாரூர் செல்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொளகிறார்.
சென்னையில் திருச்சி செல்லும் முதல்வர், அங்கிருந்து நாகப்பட்டினம் சென்று இரவு தங்குகிறார். ஆக. 25-ம் தேதி திருக்குவளையில் முதல்வரின் காலை சிற்றுண்டி விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். பிறகு, நாகை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர், எம்.பி., எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
ஆக.26-ம் தேதி முதல்வர் கள ஆய்வு திட்டத்தில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். 27-ம் தேதி திருத்துறைப்பூண்டியில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், சென்னை திரும்புகிறார்.
இந்த நிலையில் திருச்சி சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தருமபுர கல்லூரி பவள விழாவில் கலந்துகொள்கிறார். மயிலாடுதுறையில் சைவைத்தையும், தமிழையும் பரப்பி வரும் தொன்மையான தருமபுர ஆதீன திருமடம் உள்ளது. அருகிலேயே ஆதீனத்திற்கு சொந்தமான தருமபுர ஆதீன கலைக்கல்லூரியும் உள்ளது. இந்த கல்லூரி தொடங்கப்பட்ட 75 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, பவளவிழா கொண்டாடப்படுகிறது. இதில் கலந்துகொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு கட்டப்பட்டுள்ள கலையரங்கத்தையும் திறந்து வைக்கவுள்ளார். அத்துடன் தருமபுர ஆதீன ஒலி, ஒளிப்பதிவக தொலைக்காட்சி, வானொலி பதிவகத்தை திறந்து வைத்து பவளவிழா மலர் மற்றும் திருக்குறள் ஆதீன விளக்கவுரை நூலை வெளியிட்டும் பேசுகிறார்.
பவள விழாவிற்கு முதலமைச்சர் வருகை தரவுள்ளதால், நிகழ்ச்சி முன்னேற்பாடு பணிகளை தருமபுர ஆதீனம் 27வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் பார்வையிட்டார். அத்துடன் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகளும் பார்வையிட்டனர்.
பின்னர் குருமகாசந்நிதானம் , “25வது ஆதீனம் காலத்தில் தமிழ்க்கல்லூரியாக தொடங்கப்பட்டு 26வது ஆதீனம் காலத்தில் கலைக்கல்லூரியாகி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. வெள்ளிவிழா ஆண்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்போதைய முதல்வர் கருணாநிதி பங்கேற்றார். பொன்விழா ஆண்டின் போது அப்போதைய கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், உள்ளாட்சித்துறை அமைச்சர் கோ.சி.மணி ஆகியோர் கலந்துகொண்டனர். தற்போது 75வது பவள விழா ஆண்டு நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலந்து கொள்வது சிறப்புக்குரியது.” என்றார்.
24ம்தேதி முதல் நிகழ்ச்சியாக தரும கல்லூரி பவள விழாவில் கலந்து கொண்டுவிட்டு மறுநாள் 25ம்தேதி கருணாநிதி பிறந்த ஊரான நாகை மாவட்டம் திருக்குவளையில் பள்ளி குழந்தைகளுக்கான காலை உணவு திட்டத்தை தொடங்கிவைப்பதோடு, நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு கூட்டத்தில் கலந்து கொள்கிறார். மறுநாள் 26ம் தேதி நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளின் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு திருவாரூர் செல்பவர் 27ம் தேதி நாகை கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி செல்வராஜ் மகள் திருமணம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அன்று மதியமே திருச்சியிலிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
முதல்வரின் 4 நாள் வருகையையொட்டி ,பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.ம் மூலமாக சென்னை வருகிறார்.