சென்னை

அடுத்த 3 மணி நேரத்துக்குத் தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடிக்குச் சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்து இருந்தது.

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு பலத்த மழை பெய்தது. தற்போது தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்துக்கு இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.