சென்னை: தமிழ்நாட்டின் முதன்மையான பல்கலைக்கழகமாக திகழும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு  தேசிய தர மதிப்பீட்டுக் குழு A++ தகுதிச் சான்றிதழ் வழங்கியுள்ளது.

தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று குழு (National Assessment and Accreditation Council, NAAC) அல்லது என்ஏஏசி இந்தியாவின் உயர் கல்வி நிறுவனங்களை மதிப்பிட்டு தரவரிசைப் படுத்தும் ஓர் அமைப்பாகும். இந்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழு வழங்கும் நிதியில் தன்னாட்சியுடன் இயங்கும் இந்த அமைப்பு பெங்களூரைத் தலைமையகமாகக் கொண்டுள்ளது. 1986இல் இயற்றப்பட்ட தேசிய கல்விக் கொள்கைப் பரிந்துரைக்கேற்ப 1994ஆம் ஆண்டு இந்த அமைப்பு நிறுவப்பட்டது.

கல்விக் கொள்கையின் நோக்கம் கல்வியின் தரக் குறைபாடுகளை களைவதாகும். 1992ஆம் ஆண்டில் செயலாக்கத் திட்டம் வடிக்கப்பட்டு தனியதிகாரம் கொண்ட தேசிய தரவரிசைப்படுத்தும் அமைப்பொன்றை நிறுவ தொலைநோக்கு திட்டம் தீட்டப்பட்டது. இதன்படி, என்ஏஏசி 1994ஆம் ஆண்டு பெங்களூரைத் தலைமையகமாகக் கொண்டு அமைக்கப்பட்டது. என்ஏஏசியிடமிருந்து தரச்சான்று பெறுவது மூன்றுநிலை செயல்பாடாகும். முதல்நிலையில் தரப்படுத்தப்படும் நிறுவனம் தயார்படுத்திக்கொண்டு சுய ஆய்வு அறிக்கையை தருவதாகும். இதனைப் பதிப்பித்தபிறகு நேரடியாக இணைநிலை அணியொன்று சுய அறிக்கைப்படி உள்ளதா என ஆய்்ந்து பரிந்துரை அளித்தல் இரண்டாம்நிலை ஆகும். மூன்றாம் நிலையில் என்ஏஏசியின் செயற்குழு இறுதி முடிவெடுப்பதாகும்.

என்ஏஏசியிடமிருந்து தரச்சான்று பெறுவது மூன்றுநிலை செயல்பாடாகும். முதல்நிலையில் தரப்படுத்தப்படும் நிறுவனம் தயார்படுத்திக்கொண்டு சுய ஆய்வு அறிக்கையை தருவதாகும். இதனைப் பதிப்பித்தபிறகு நேரடியாக இணைநிலை அணியொன்று சுய அறிக்கைப்படி உள்ளதா என ஆராய்ந்து பரிந்துரை அளித்தல், இரண்டாம்நிலை ஆகும். மூன்றாம் நிலையில் என்ஏஏசியின் செயற்குழு இறுதி முடிவெடுப்பதாகும்.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் பொறியியல் கல்வி நிறுவனமான  அண்ணா பல்கலைக்கழகத்திற்கு A++ தர மதிப்பீடு வழங்கி உள்ளது.  NAAC குழு. 2019 முதல் NAAC அங்கீகாரம் இல்லாமல் பல்கலைக்கழகம் செயல்பட்டு வந்த நிலையில் A++ வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக சென்னை பல்கலைக் கழகத்துக்கு தேசிய தர மதிப்பீட்டுக் குழுவின் A++ தகுதிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.