பெண்கள் மீதான பாலியல் வன்முறை, இனக்கலவரம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஒருபுறம் இருக்க நமக்கு தக்காளி சட்டினியாவது மிஞ்சுமா என்று எண்ணும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளது நிதர்சனம்.

கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஒரு கிலோ தக்காளி ரூபாய் 100 முதல் 200 வரை உயர்ந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தில் தற்போது இதன் விலை 100 ரூபாய்க்கும் குறைவாக உள்ளது.

வடமாநிலங்களில் தக்காளி விலை தாறுமாறாக உயர்த்தப்பட்டதை அடுத்து மக்களின் சிரமத்தை போக்க களத்தில் இறக்கிவிடப்பட்ட மத்திய கூட்டுறவு சங்கங்கள் தக்காளியை கிலோ ரூபாய் 70 க்கு விற்பனை செய்து வருகிறது.

இன்று டெல்லி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வண்டிகள் மூலம் தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ. 70 என்று மெகா விற்பனை செய்யப்பட்டது.

மக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் தக்காளி சட்னி செய்யும் ஆவலில் இந்த நடமாடும் கடைகளில் குவிந்தனர்.

இதனால் மத்திய அரசின் நேரடி அதிகாரத்தின் கீழ் வந்துள்ள டெல்லி மக்கள் மகிழ்ச்சி அடைந்ததுடன் மத்திய அரசு இனி தொடர்ந்து தக்காளி விற்பனையில் ஈடுபட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.