சென்னை
இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மஞ்சள் நிற பேருந்துகள் சேவையைத் தொடங்கி வைக்க உள்ளார்.
தற்போது தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் மாநகர பேருந்துகள் நீல நிறங்களிலும், சிவப்பு நிறங்களிலும் இயங்கி வருகின்றன. மாநிலம் முழுவதும் உள்ள எட்டு கோட்டங்களில் சேதமடைந்த பேருந்துகள் சீரமைக்கப்பட உள்ளன.
அதில் ஒரு பகுதியாக, பழைய வண்ணம் மாற்றப்பட்டு, மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் நிறத்துக்குப் பேருந்துகள் மாற்றப்பட உள்ளது. அதாவது இனி தமிழகத்தில் அரசு பேருந்துகள் மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் நிறத்துக்கு மாற்றப்பட உள்ளது.
பேருந்துகளின் நிறம் மட்டுமின்றி, இருக்கை, அமரும் வசதி போன்றவை விரிவாக இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இன்று இந்த பேருந்துகள் சேவையினை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த புதிய பேருந்துகள் சென்னை, பெங்களூரு, திருச்சி, கரூரில் புதிய பேருந்துகள் தயாராகி வருகின்றன.