சென்னை: முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்போலோ  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

சர்ச்சைப்புகழ்  அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடலில் கட்டி ஏற்பட்டு உள்ளதாகவும், இதனால், அவர் அவதிப்பட்டட நிலையில், அந்த  கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றும் வகையில்,  சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் வனத் துறை அமைச்சராக பதவி வகித்தவர்.திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏவுமான திண்டுக்கல் சீனிவாசன்,  கடந்த சில நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது,  மு.க.ஸ்டாலினை மீண்டும் முதல்வராக்குவோம் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.