மேஷம்
ஆரோக்யம் கொஞ்சம் கண்ணாமூச்சி காட்டும். உடனே கவலைல மூழ்கிடாதீங்க. டோன்ட் ஒர்ரி. பெரிசாய் சர்ஜரி அது இதுன்ன ஆகாது.. பயம் வேண்டாம். நிறைய மருந்து மாத்திரைகள் சாப்பிடும்படியாக வரலாம். கண் டெஸ்ட் செய்யணும்னா கண்டிப்பா செய்துக்குங்க. சுத்தமும் சுகாதாரமுமாய் உடம்பை வைச்சுக்குங்க. பெண்களுக்கு மாதாந்திரப் பிரச்சினை சம்பந்தமான சின்ன சின்ன உபாதைகள் ஏற்பட வாய்ப்பு இருக்கு. ஆனாலும் நீடித்த பிரச்சினையாய் எந்த ஆரோக்யக் குறைபாடுமே இருக்காது. ஒங்களோட கணவரின்/ மனைவியின் புத்திசாலித்தனம் காரணமாக அவருக்கு அலுவலகத்தில் புகழும் உங்களுக்குக் குடும்ப சர்க்கிளில் நன்மைகளும் உண்டு. அவசியமே இல்லாமல் எதிர்மறை எண்ணங்களை வளர்த்துக்காதீங்கங்கப்பா. நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் இருங்க. உண்மையில் உங்களால சாத்தியமான ஈஸியான விஷயங்களைக்கூடப் பார்த்து எதுக்காக பயந்து ஒதுங்கி உங்களால முடியாதுன்னு நெனைக்கறீங்க?
ரிஷபம்
ஒன்றுக்கு மேற்பட்ட லாபங்களும் வருமானங்களும் கிடைக்கும். ஆனால் அதை வகையாக எப்படி எங்கே இன்வெஸ்ட் செய்வது என்று உங்களின் நலம் விரும்பும் பெரியோரின் அல்லது பெற்றோரின் ஆலோசனை கேட்டு முடிவு செய்ங்க. ஸ்டூடன்ட்ஸ் பெருமைப்படும்படியான சம்பவங்கள் நடக்கும். புகழும் பெருமையும் வெற்றியும் அடைவீங்க. நீங்களே எதிர்பார்க்காத அளவு பொறுமையும் பக்குவமும் வந்திருக்குமே. ஆனால் அது விரக்தியா மாறாமல் பார்த்துக்குங்க. குறிப்பாய்க் காதல் விவகாரங்களில் சில சறுக்கல்களும் ஏமாற்றங்களும் ஏற்படாதபடி பேசிப்பழகுங்க. உங்க குழந்தைங்க ஆபீஸ்ல வெற்றி பெற்று அவார்ட் ரிவார்ட் வாங்குவாங்க. நீங்க விரும்பிய விஷயங்கள் நடக்கலைன்னு எரிச்சல்ல இருந்தீங்க. வெயிட்டீஸ். நீங்களே எதிர்பார்க்காதபடி நீங்க விரும்பிய திருப்பங்கள் உங்களுக்கே தெரியாதபடி நடந்துக்கிட்டிருக்கு. குல தெய்வத்தை வணங்குங்க.
மிதுனம்
அடுத்தடுத்து வருமானமும் லாபங்களும் வரும். ரொம்ப காலம் எதிர்பார்த்துக் காத்துக்கிட்டிருந்த தொகை ஒண்ணு கைக்கு வரும். உங்களுக்குத் திரும்ப வர வேண்டிய அல்லது நீங்க திருப்ப வேண்டிய கடன்கள் கேட்டுக்கேட்டு ஓய்ந்த நிலையில் ஒரு முடிவுக்கு வந்து ஒங்களுக்கு சந்தோஷ அதிர்ச்சி தரும். குழந்தைங்க உங்களை மனம் நோகப் பேசினாலும் சரி.. அவங்க செயல்கள் உங்களுக்கு டென்ஷன் ஏற்படுத்தினாலும் சரி.. சற்றே பொறுமையை அணிந்து கொள்ள வேண்டும். சரியாகும். சரியாவாங்க. மம்மி கிட்ட தேவையேயில்லாம சண்டை போடாதீங்க, நல்ல வேளையாய்க் குடும்பம் ஜாலியா சந்தோஷமா இருக்கும். நண்பர்கள் கிட்ட ஒங்களோட அணுகுமுறையில கொஞ்சமாச்சும் கவனம் தேவைங்க. ஒங்களுக்குப் பிரியமானவங்க கிட்டப் பேசும் போது கவனமாகப் பேசுங்கப்பா. முக்கியமான முடிவுகளை இந்த வீக் எடுக்கறதை அவாய்ட் செய்ய முடியும்னா பெட்டர். வேற வழியே இல்லைன்னா மட்டுமே செய்ங்க.
கடகம்
‘செலவைக் கட்டுப்படுத்த வேணும்‘னு ஒரு பெரிய ஷீட்ல ப்ரின்ட் அவுட் எடுத்து வெச்சுக்கிட்டுக் கண்ணில் தெரியும் இடத்தில பெரிசா மாட்டி வைச்சு உற்றுப் பார்த்துக்கிட்டே இருங்க. சில செலவுகள் அத்தியாவசியமாகவும் எதிர்கால நன்மை கருதியும் இருக்கும்தான். ஆனா அதுக்காக கார்ட்டு தேய்ஞ்சு ஒல்லியாற வரைக்கும் தேய்க்காதீங்க. யோசிச்சு நல்லபடி செலவு செய்தால், இன்வெஸ்ட்கூடச் செய்வீங்க. பாஸ்போர்ட் விசா சம்பந்தமான செலவுங்க வந்தா ஒங்களுக்கு உதவிகரமா இருக்கும். இருக்கும். நீங்க கடந்த சில வருஷங்கள் செய்த செலவுக்கும் முதலீட்டுக்கும் ஏற்ற லாபங்கள் சற்று நிதானமாகத்தான் வரும், பயமே வேணாம். கட்டாயமாக வரும். ஏராளமான நண்பர்கள் உங்களுக்குச் சேருவாங்க. அவங்க கிட்ட சற்றே கவனமுடன் பழகினால் போதும். மனசுவிட்டுப் பேசறேன் பேர்வழி என்று சகலத்தையும் கவிழ்த்துக் கொட்டி வைக்காதீங்க. அப்புறம் ஏண்டா சொன்னோம்னு நீங்கதான் ஃபீல் செய்வீங்க.
சிம்மம்
பல நாளா டென்ஷன் குடுத்துக்கிட்டிருந்த ஒரு சிறு விஷயம் பற்றி நிம்மதியான சொல்யூஷன் கெடைக்கும். அதை உங்க குடும்பத்துல உள்ள ஒருவர் பொறுப்பேற்றுச் செய்து வயிற்றில் பால் வார்ப்பார். சகோதர சகோதரிகளுடன் சந்தோஷமாய்ப் பொழுது போகும். வெளியூர் அல்லது வெளிநாடு போவீங்க… தனியாய்ப் போகவோ ஃபேமிலியோட போகவோ சான்ஸ் இருக்குங்க… டாடிக்கு நிறைய நன்மைகளும் ஒண்ணு ரெண்டு கடுகு சைஸ் பிரச்சினைங்களும் ஏற்படும். பயப்படாதீங்க. சமாளிச்சுடுவாரு. ஒங்களுக்கு வெளி மனிதர்கள் கிட்ட, அபரிமிதமாய் ஒரு கோவம் வருது பாருங்க. அதைக்கொஞ்சம் கட்டுப்படுத்திக்குங்க. உங்க மேல பிரியம் வெச்சு உங்களைக் கல்யாணம் செய்துக்கிட்டாங்களே.. அவங்க/ அவரு கிட்ட விட்டுக்கொடுத்துப் போகணுங்க. நண்பர்களோ.. உறவினர்களோ.. குடும்பத்தினரோ.. (குறிப்பா மம்மி டாடி) அவங்களோட சின்ன்ன்னக் குற்றங்களைப் பெரிது படுத்தாதீங்க.
கன்னி
ஒங்க கிட்ட தேவையே இல்லாத வகைல அமைதியின்மை மற்றும் பாதுகாப்பின்மை உணர்வு காணப்படும். அவசியமில்லாத கற்பனை பயங்கள் மனசில் காளான் மாதிரிப் பூக்கும். இதனால் ஒங்களோட தன்னம்பிக்கை குறையும்தானே? எதுக்குங்க இப்பிடி இருக்கீங்க. ஒங்களால முடியலைன்னா யாரால வெற்றி பெற முடியுங்க? ஜஸ்ட் நீங்க உற்சாகமா முயற்சி செய்யணும். தட்ஸ் ஆல். யம்மாடியோ.. குடும்பத்துல ஒரு கெட் டு கெதர்.. அல்லது திருமணம் வந்து எல்லாரும் மீட் செய்யப்போறீங்க. குடும்பத்திலும் உறவுக்காரங்க மத்தியிலும் இருந்துக்கிட்டிருந்த நிறையப் பகைகளும் சண்டைகளும் ஒரு முடிவுக்கு வரும். நிம்மதியும் சந்தோஷமும் நிலவும். யாரையோ வழியனுப்ப ஏர்போர்ட் போவீங்க. திடீர்னு நகைங்களும் புது உடைங்களும் வாங்கி சந்தோஷப்படுவீங்க. வெளிநாட்ல உள்ள உறவுக்காரங்களோட சந்தோஷமாய்ப் பேசுவீங்க.
துலாம்
திடீர்னு வருமானமும் லாபமும் அதிகரிக்கும். பல காலம் வசூலாகாத தொகையெல்லாம் வரும். ரொம்பவும் திடீர் செலவும் உண்டு. கவனமாய்… தயாராய் இருங்க. எது எப்பிடி இருந்தாலும்கூட இந்த வாரம் ஒங்களுக்குச் சிறப்பான வாரம். சில குட் நியூஸ் எல்லாம் காதுல விழும். அதிலும் மேலதிகாரிங்க கிட்டேயிருந்து வரும்போது ஜிலு ஜிலுன்னு சந்தோஷம் ஏற்படும் பாருங்க. அதுக்கு ஈடு இணையே கெடையாதுங்க. கலைத்துறைல உங்களுக்கு திடீர்னு ஒரு இன்டரெஸ்ட் வரும். எதிர்பாராம ஏற்பாடாகும் சுப நிகழ்ச்சி உங்களை ஹாப்பியா ஆக்கும். டாடிக்கு ஒரு சந்தோஷ நியூஸ் வரும். இதனால வீடே குதூகலமாகும். . சவாலான சூழ்நிலைகள் காரணமா இந்த வாரம் சமநிலை இழந்துடாதபடி பொறுமையுடனும் நம்பிக்கையுடனும் இருக்கணும்னு நல்லா நினைவு வெச்சுக்குங்க. நம்பிக்கையோட செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். மனசுல சந்தோஷம் வர்றதுக்கு உங்க செயல்களே காரணமா அமையும்.
சந்திராஷ்டமம்: ஜூலை 13 முதல் ஜூலை 15 வரை சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாயிருங்கள்.
விருச்சிகம்
ஒரே சமயத்துல பல விஷயங்களில் ஈடுபட வேண்டியிருக்கும். சாப்பிட தூங்க நேரம் ஒதுக்கிக்குங்க. சொல்லிட்டேன். அரசாங்க சம்பந்தப்பட்ட விஷயங்கள் ஒரு பக்கமும்.. விசா பாஸ்போர்ட் போன்ற வெளிநாட்டு வேலைகள் இன்னொரு பக்கமும்… கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்கள் மறுபக்கமும்.. திருமணம் காதல் போன்றவை மற்றொரு பக்கமும்.. உங்களைப் பிடிச்சு இழுக்கும். எந்தப் பக்கம் திரும்புவது என்ற குழப்பமெல்லாம் இல்லாமல் அழகாய்த் திட்டமிட்டு செய்ய உங்களுக்கா சொல்லிக்கொடுக்கணும். ஜமாயுங்க. உங்களோட உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்திக்கணுங்க. அற்பத்தனமாக காரணங்களுக்காக வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளதால் ஒரு உரையாடலை தொடங்கறதுக்க முன்னாடியோ ஒருமுறைக்கு இருமுறை யோசிங்க. விட்டுக்கொடுக்கும் அணுகுமுறை தேவைங்க. குட்டியூண்டு விஷயங்களைப் பெரிசா எடுத்துக்க வேணாங்க.
சந்திராஷ்டமம்: ஜூலை 15 முதல் ஜூலை 17 வரை சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாயிருங்கள்.
தனுசு
உங்களுக்கே ஒங்களுக்குன்னு ஒரிஜினலாவே ஒரு புத்திசாலித்தனம் உண்டல்லவா? அது இப்போ மேலும் ஷைன் ஆறதுக்கான சான்ஸஸ் அதிகமாகும். பல வகை செலவுகள் வருதேன்னு டென்ஷன் ஆகாதீங்க. பல செலவுகளை ஜாலியாத்தானே செய்யறீங்க? மேலும் செலவுக்கேத்த வருமானம் வருதில்லையா? பின்ன என்ன? அது மட்டுமா என்ன? திடீர் அதிருஷ்ட வாய்ப்பெல்லாம் வந்து உங்களை மகிழ்ச்சிக்கடலில் திக்குமுக்காட வைக்கும். நிறைய நண்பர்கள் புதுசு புதுசாச்சேருவாங்க. பழைய பகைவர்கள்கூட வெள்ளைக் கொடி காட்டி நட்புக்கரம் நீட்டுவாங்க. சேர்த்துக்குங்க. எனினும் சற்று ஜாக்கிரதை உணர்வுடன் இருப்பது நல்லதுங்க. ஏற்கனவே பலரிடம் பட்டுட்டீங்க. போதாதா? லோன் போட இது நேரம் இல்லை. அடேயப்பா.. எத்தனை விதமான வருமானங்கள்… லாபங்கள்.. நன்மைகள்… மகிழ்ச்சிகள்? என்றைக்கோ கொடுத்த கடன்கள் நீங்க கேட்காமலேயே உங்க வீட்டு வாசல்ல வந்து காலிங்பெல் அடிக்கும்.
சந்திராஷ்டமம்: ஜூலை 17 முதல் ஜூலை 20 வரை/சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாயிருங்கள்
மகரம்
அரசாங்கத்திடமிருந்து வர வேண்டிய தொகை பல கால காத்திருப்புக்குப்பிறகு ஏராளமான முயற்சிகளுக்குப் பிறகு இப்போ உங்களை வந்தடையும். குடும்பத்துல பிரிஞ்சு போனவங்களும் சண்டை போட்டவங்களும் ஒண்ணாச் சேரப்போறாங்க. சின்னச்சின்ன அஜீரணப் பிரச்சினைகளைப் பற்றி ஒரேயடியாய்ப் பயந்து டென்ஷன் ஆகி வெக்காதீங்க. வளர்ச்சியில் சில தடைகள் காணப்படும் என்றாலும் உறுதியுடனும் கவனமுடனும் செயல்பட்டு அதனை சமாளிச்சு வெற்றி காண்பீங்க. ஒங்களோட அஃபிஷியல் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இலக்குகளை அடைவதற்கான தன்னம்பிக்கை உங்க கிட்ட நிறைஞ்சு காணப்படும். அப்பாவின் விருப்பம் ஒண்ணு நிறைவேறும். பல காலமா நீங்க அனுபவிச்சுக்கிட்டிருந்த பிரச்னை ஒண்ணு ஒங்களைவிட்டு ஒரேயடியா விலகி மனசுல சந்தோஷமும் உற்சாகமும் அதிகரிக்கும்.
கும்பம்
ஒங்க குடும்பத்துல ஒங்களுக்கோ அல்லது உடன் பிறந்தவங்களுக்கோ அல்லது ஒங்க குழந்தைங்கள்ல ஒருத்தருக்கோ, மனம் நிறைஞ்ச மண வாழ்வு அமையும். நீங்க எதிர்பார்த்ததெல்லாம் நல்லபடியா நிறைவேறும். குழந்தைங்களைப் பற்றி இருந்து வந்த டென்ஷன்கள் அகலும். வெடுக்கென்று பேசி மத்தவங்க மனசைப் புண்படுத்திடாதீங்க. அவங்க பெரிசா ரியாக்ட் செய்துட மாட்டாங்க. பிரச்சினையோ சண்டையோ வராதுதான். ஆனா நீங்க நினைச்சு நினைச்சு வருத்தப்படக் கூடாதில்லையா? சட்டென்று அவசரமாக முடிவுகள் எடுக்க வேணாங்க. குறிப்பாக வீடு வாங்குவது.. கல்யாணம் போன்ற பெரிய விஷயங்களில் யோசனையுடன் செயல்படுங்க. நன்மை கருதுபவர்களின் அட்வைஸ் கேளுங்க. பணிகள் அதிகமாக் காணப்படும். ஒங்களோட இலக்குகளை நீங்க அடைவீங்க. முக்கியமான முடிவுகள் எடுக்க இது உகந்த வாரம்.
மீனம்
நல்ல ஃப்ரெண்ட்ஸ் ஏராளமான நன்மைகள் செய்வாங்க. பகைவர்கள் மனசு மாறி உங்க அருமை உணர்ந்து மனசார மன்னிப்புக் கேட்பாங்க. தாராளமாக மன்னிக்கலாம். சகோதர சகோதரிகள் ஒரு நாளைக்கு நடந்துக்கிட்டா மாதிரி மறு நாள் நடந்துக்க மாட்டாங்க. கவனமா இருங்க. ஆனாலும் நீங்க நீங்களாவே இருங்க. அவங்க சீக்கிரத்தில் உங்களோட மேன்மையை உணர்வாங்க. சின்னச்சின்ன உடல் உபாதைகள் ஏற்படும். அதையெல்லாம் பொருட்படுத்தி நிம்மதி இழக்க வேணாங்க. மெல்லமெல்லத்தான் சரியாகும். செலவுங்க கட்டுப்பாட்டில்தான் இருக்கும். எல்லாத்தையும் கவனமாய்த் திட்டமிட்டுத்தான் செய்யறீங்க. எதிலுமே அவசரம் வேண்டாம். பேச்சினால் நன்மைகள் உண்டாகும். மகிழ்ச்சிகரமாக வாரமா இருக்கும். ஒங்களோட செயல்களை கவனமாக யோசிச்சுச் செய்வீங்க. சரியாத் திட்டமிடறீங்க. வெரி குட். ஒங்களோட நண்பர்களின் ஆதரவைப் பெறுவீங்க. இந்த வாரத்தை நல்லாப் பயன்படுத்திக்குங்க.