சென்னை

ன்று அமைச்சர் துரைமுருகன் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக . மத்திய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்திக்க டில்லி செல்கிறார்.

மத்திய நீர்வளத்துறை அமைச்சரை  மேகதாது அணை பிரச்சினை தொடர்பாகச் சந்தித்துப் பேசத் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று  டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். நாளை மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செஷகாவத்தை அவர் சந்தித்துப் பேச உள்ளார்.

நேற்று காலை தமிழக முதல்வருடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் துரைமுருகன் மாலை நீர்வளத்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.  இக்கூட்டத்தில் ஜூன் மாதத்தில் கர்நாடக அரசு திறந்திருக்க வேண்டிய காவிரி நீரின் அளவு மற்றும் ஜூலை மாதத்தில் திறந்து விட வேண்டிய காவிரி நீரின் அளவு குறித்து ஆலோசனை நடத்தி

இன்று காலை அதற்கான ஆவணங்களுடன் அமைச்சர் துரைமுருகன் டில்லி செல்கிறார்.  அவர் காவிரி மேலாண்மை வாரியத்தின் வருடாந்திர கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதம் நடத்த உள்ளதால் மத்திய ஜல் சக்தி துறை அமைச்சரைச் சந்திக்க இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

மத்தியில் பாஜக அரசும், கர்நாடகாவில் காங்கிரஸ் அரசும் அமைந்துள்ளதால் அணை விவகாரம் அரசியல் ரீதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதால் மேகதாது விவகாரம் இரு மாநில அரசியலில் புயலைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.