நிலவை ஆய்வு செய்யும் இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஜூலை 14 ஆம் தேதி ஏவத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) முதல்முறையாக 2008 ம் ஆண்டு சந்திராயன் விண்கலத்தை ஏவியது நிலவை ஆய்வு செய்ய திட்டமிடப்பட்ட இந்த முயற்சி வெற்றிபெறவில்லை.
இதனையடுத்து 2019 ம் ஆண்டு சந்திராயன்-2 விண்கலத்தை ஏவியது நிலவின் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்ட இந்த விண்கலத்தில் இருந்து அதன் லேண்டர் ‘விக்ரம்’ தரையிறங்க முடியாமல் போனதில் இந்த முயற்சியும் கடைசிக்கட்டத்தில் தோல்வி அடைந்தது.
இந்த நிலையில் தற்போது சந்திராயன்-3 விண்கலம் ஜூலை 14 ம் தேதி பிற்பகல் 2:30 மணிக்கு மார்க்-III ஏவுகணை வாகனம் மூலம் ஏவப்பட்ட உள்ளது.
615 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆராய்ச்சி திட்டம் குறிப்பிடத்தக்க வெற்றி கிடைக்கும் என்று இஸ்ரோ நம்பிக்கை தெரிவித்துள்ளது.
“சந்திரயான்-3, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட லேண்டர் மாட்யூல் (எல்எம்), ப்ராபல்ஷன் மாட்யூல் (பிஎம்) மற்றும் ரோவர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது, இது கிரகங்களுக்கு இடையேயான பயணங்களுக்குத் தேவையான புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி நிரூபிக்கும் நோக்கத்துடன் உள்ளது. லேண்டர் ஒரு குறிப்பிட்ட சந்திர தளத்தில் மென்மையாக தரையிறங்கும் திறனைக் கொண்டிருக்கும் மற்றும் அதன் இயக்கத்தின் போது சந்திர மேற்பரப்பில் உள்ள இடத்திலேயே இரசாயன பகுப்பாய்வு செய்யும் ரோவரை நிலைநிறுத்துகிறது” என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.