சென்னை:
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜூலை 1 முதல் 5 நாட்களுக்கு லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.