வாஷிங்டன்
பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் மனைவி ஜில் பைடனுக்கு 7.5 கேரட் வைரம் ஒன்றை பரிசளித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவர் மனைவி ஜில் பைடன் ஆகியோர் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.க்கு சென்றடைந்த பிரதமர் மோடியை வரவேற்றனர். பின்பு, மோடி இந்திய நடனத்தின் துடிப்பான கலாச்சாரத்துடன் புதிய தலைமுறையினரை இணைக்க உதவும், டி.எம்.வி. அடிப்படையிலான ஸ்டுடியோ தூம் என்ற இந்திய நடன ஸ்டுடியோவின் இளம் நடனக் கலைஞர்களின் நடன நிகழ்ச்சியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ஜில் பைடனுடன் கண்டு களித்தார்.
இதற்குப் பிறகு, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி மற்றும் முதல் பெண்மணியான ஜில் பைடனுக்கு, ஆய்வகத்தில் உருவான 7.5 கேரட் வைரம் ஒன்றைப் பிரதமர் மோடி பரிசளித்து உள்ளார்.
இந்த வைரம் பூமியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட வைரத்தின் ரசாயன மற்றும் ஒளி பண்புகளைப் பிரதிபலிக்கும் தவிரச் சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒன்றாக இருக்கும். இந்த வைரமானது சூரிய மற்றும் காற்று சக்தி உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி, சுற்றுச்சூழல் பன்முகத் தன்மை வாய்ந்த முறையில் தயாரிக்கப்பட்டு உள்ளது.