பெங்களூரு

ள்ளிரவில் பெங்களூருவில் தேவாலய பீடத்தை அடித்து நொறுக்கிய கிறித்துவ இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூரு நகரில் உள்ள கம்மனஹள்ளியில் 10 ஆம் பாயஸ் தேவாலயம் உள்ளது. இங்கு நேற்று முன் தினம் நள்ளிரவு 3 மணியளவில் உள்ளே நுழைந்த நபர் ஆலயத்தின் பலி பீடம், நற்கருணை பேழை, சுரூபங்கள் ஆகியவற்றைக் கம்பியால் அடித்து நொறுக்கினார்.  பிறகு களைப்புடன் வெளியே வந்து தேவாலயத்தின் நுழைவாயிலில் தூங்கிக்கொண்டிருந்த காவலாளியை எழுப்பி, அவரிடம் தண்ணீர் வாங்கி குடித்தார். இந்த வீடியோ காட்சிகள் சிசிடிவி கேமிராவில் பதிவானது.

நேற்று காலை 6 மணியளவில் திருப்பலுக்காகக் கோயிலைத் திறந்தபோது பீடம் அடித்து நொறுக்கப்பட்டிருப்பதைக் கண்டு காவலாளி அதிர்ச்சி அடைந்தார். காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பானஸ்வாடி காவல்நிலைய ஆய்வாளர் சந்தோஷ் குமார், பெங்களூரு கிழக்கு துணை காவல் ஆணையர் பீமசங்கர் ஆகியோர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். தற்போது இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு துணை காவல் ஆணையர் பீமசங்கர்,

“தேவாலயத்தில் பதிவான ‘சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இதே பகுதியைச் சேர்ந்த டாம் மேத்யூ (29) என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். இதை அவர் மது போதையில் செய்துள்ளார். இந்த தேவாலயத்தின் நுழைவாயிலில் 4 மது பாக்கெட்டுகள் கிடந்தன. அவர் குடும்பப் பிரச்சினையால் மனப்பிறழ்வு அடைந்துள்ளதால் விசாரணை நடத்த முடியாத நிலை நிலவுகிறது”

என்று தெரிவித்துள்ளார்.