கீங்

க்ரைன் நாட்டில் மேலும் ஒரு அணையை ரஷ்ய குண்டு வீசி தகர்த்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நடந்து வருகிறது.   உக்ரைன் தனது நட்பு நாடுகளின் உதவியோடு ரஷ்யாவின் தாக்குதல்களை எதிர்கொண்டு வருகிறது.  இந்நிலையில் உக்ரைன் நாட்டின் கொசான் பிராந்திய படைப்பிரிவு செய்தி தொடர்பாளர் வேலரி ஷொஷேன் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில்,

”ரஷ்ய ஆக்கிரமிப்பு படையினர் மோக்ரி யாலி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையைக் குண்டு வீசி தகர்த்துள்ளனர்.  இதனால் அந்த நதியின் இரு கரைகளிலும் கடும் வெள்ளப் பெருக்கு  ஏற்பட்டுள்ளது.  உக்ரைன் படையினர் நதிக் கரையோர ஆக்கிரமிப்பு பகுதிகளில் எதிர்த் தாக்குதல் நடத்தி முன்னேறி வருகின்றனர்.

உக்ரைன் படையினர் வேகமாக முன்னேறுவதைத் தடுக்க ரஷ்யா இந்த அணையைத் தகர்த்துள்ளது.   ஆயினும் உக்ரைன் ராணுவத்தில் முன்னேற்றம் தொடர்கிறது.   ரஷ்யாவின் முயற்சி இந்த அணை விவகாரத்தில் வெற்றி பெறவில்லை”

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.