சென்னை

மிழக அரசு போக்குவரத்துக் கழகம் 1500 சிறப்புப் பேருந்துகளைப் பள்ளித் திறப்பை முன்னிட்டு இயக்க உள்ளது.

தமிழக அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

“2023- ஆம் வருடம் பள்ளிகளுக்கான கோடைக்கால விடுமுறை முடிந்து வரும் ஜூன் 12 அன்று பள்ளிகள் திறக்க இருப்பது மற்றும் இந்த வார இறுதி நாட்களான 09-06-2023 முதல் 11-06-2023 வரையிலான (வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு) மூன்று தினங்களில் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாகச் சிறப்புப் பேருந்துகளை இயக்கிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்தின் முக்கிய இடங்களிலிருந்து வார இறுதி நாட்களில் சென்னைக்கு 650 பேருந்துகளும், கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூருக்கும் கூடுதலாக 850 சிறப்புப் பேருந்துகள் என, ஆக மொத்தம் 1,500 பேருந்துகளை இயக்கிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, முன்பதிவு செய்து பயணித்திடக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இச்சிறப்பு பேருந்துகள் இயக்கத்தினை அனைத்து பேருந்து நிலையங்களிலும், போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, கண்காணித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.”

என அறிவிக்கப்பட்டுள்ளது.