சென்னை

விதிகளை மீறியதாகச் சென்னை போக்குவரத்து காவல்துறை ரூ. 13 கோடி அபராதம் விதித்துள்ளது.

சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் அபராதம் வசூலிக்க 10 இடங்களில் அழைப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், அபராதம் செலுத்தாத 9,526 பேரை அபராதம் செலுத்தச் சென்னை காவல் துறையினர் நேரில் அழைத்தனர்.

இத்தகைய சிறப்பு நடவடிக்கை மூலம் கடந்த 20-ம் தேதி 586 வழக்குகள் தீர்வு காணப்பட்டு, அபராத தொகையாக ரூ.60,36,000 வசூலிக்கப்பட்டது. கடந்த 4 மாதங்களில் அழைப்பு மையங்கள் மூலம் 12,551 வழக்குகள் தீர்வு காணப்பட்டு ரூ.12,99,08,600 அபராதத்தொகை வசூலிக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.