பாரிஸ்

விரைவில் அமேசான்நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தனது காதலியைத் திருமணம் செய்ய உள்ளார்.

அமேசான் நிறுவனர்  ஜெஃப் பெசோஸ் உலகப் பணக்காரர்களில் நான்காவது இடத்தில் உள்ளார். அவர் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற அந்தஸ்தில் சில காலம் இருந்துள்ளார்.  கடந்த 1994-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி அமேசான் நிறுவனம் நிறுவப்பட்டது.  இந்த நிறுவனத்தை சாதாரண புத்தகக் கடையாகத் தொடங்கி, அதன்பின் படிப்படியாக வளர்த்து ஆன்லைன் வர்த்தகத்தில் உச்சத்துக்குக் கொண்டு வந்தவர் ஜெஃப் பெசோஸ் ஆவார்

முதலில் மெக்கென்சி ஸ்காட் என்பவரை ஜெஃப் பெசோஸ் திருமணம் செய்துகொண்டார். இடையே, லாரன் சான்செஸ் என்ற பெண்ணை ஜெஃப் பெசோஸ் 2018-ஆம் ஆண்டுமுதல் காதலித்து வந்துள்ளார்.  கடந்த 2019 ஆம் ஆண்டு பத்திரிகையாளரான லாரன் சான்செஸ் உடனான காதலை, ஜெஃப் வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். தொடர்ந்து முதல் மனைவியுடன் விவகாரத்து நடந்தது.  இவர்களுக்கு 4 பிள்ளைகள் உள்ளனர்.

பிரான்சில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில், ஜெஃப் பெசோஸ் தனது காதலியான லாரன் சான்செனஸுடன் கலந்து கொண்டார். இவர்கள் இருவரும் நிச்சயதார்த்த மோதிரத்தை அணிந்திருந்ததாகவும், விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.