சென்னை

ராகுல் காந்தியின் ஸ்ரீபெரும்புதூர் அயணம் திடீர் என ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாளை ராஜீவ்காந்தியின் 32-வது ஆண்டு நினைவு தினம் ஆகும். ,  இதை முன்னிட்டு நாளை காலை 8 மணியளவில் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் நடைபெறுகிற அஞ்சலி நிகழ்ச்சியில் ராகுல்காந்தி பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இன்று, ராகுல் காந்தியில் ஸ்ரீபெரும்புதூர் பயணம் ரத்து செய்யப்படுவதாகத் தமிழ்நாடு காங்கிரஸ் அறிவித்து உள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் நினைவு தின நிகழ்ச்சியில் ராகுல் காந்தியால் பங்கேற்க முடியவில்லை எனவும் அறிவித்துள்ளது.