சென்னை
தமிழகத்தில் உள்ள தகவல் தொழில் நுட்ப பூங்காக்களில் சுமார் 27% இடங்கள் காலியாக உள்ளன.
தமிழகத்தில் எல்காட் நிறுவனம் சென்னை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், மதுரை, ஓசூர் என 7 இடங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைந்துள்ளது. இதன் மொத்த பரப்பளவு சுமார் 1359.12 ஏக்கர் ஆகும்.
இந்த தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களின் மொத்த இடப்படரப்பான 1359.12 ஏக்கரில் 374 ஏக்கர் நிலம் காலியாக உள்ளது. அதாவது கட்டிடம் கட்டப்பட்டுள்ள வளாகங்களில் 8,90,000 சதுர அடி அளவிற்குச் செங்கல்பட்டு, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு ஆகிய இடங்களில் காளியாக்க உள்ளது
எல்காட் நிறுவனம்,
“தமிழகத்தில் உள்ள தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களில் காலியாக உள்ள இடங்களை சந்தைப்படுத்துவதற்குத் தேவையான ஆலோசனை நிறுவனங்கள் நியமிக்கப்படவுள்ளது விரைவில் அனைத்துப் பூங்காக்களிலும் விரைவில் 100% அளவிற்கு நிறுவனங்களால் எடுத்துக்கொள்ளப்படுவதே நோக்கம்”
எனத் தெரிவித்துள்ளது.