சென்னை:
மிழ்நாட்டில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்களை கையில் எடுத்து போராட்டத்தை அறிவித்துள்ளது. அதே நேரத்தில் செந்தில் பாலாஜியை முதல்வர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அண்ணாமலை வரும் ஞாயிறன்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளிக்கப்போவதாகவும் கூறியுள்ளார்.

தமிழகத்தில் விஷ சாராயம் குடித்து விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 22 பேர் உயிரிழந்தனர். கள்ளச்சாராய மரணத்திற்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக, வரும் 20ம் தேதி கண்டன போராட்டம் நடத்தப்படும் என, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு ஆளுநர் அவர்கள் உத்தரவிட வேண்டும் இதற்காகவும் ஆளுநரை சந்தித்து மனு அளிக்கப்போவதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார்.