சென்னை

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அரசாணையில்  ஐ ஏ எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

இன்று தமிழக அரசு ஒரு அரசாணை வெளியிட்டுள்ளது.  ஜி ஓ ஆர்டி 2014 என எண்ணுள்ள அந்த அரசாணையில் ஐ ஏ எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி

1.       என் முருகானந்தம் ஐ ஏ எஸ் அவர்கள் அரசு கூடுதல் தலைமை நிதிச் செயலர் பணியில் இருந்து முதல்வரின் தலைமையசலராக மாற்றை செய்யப்பட்டுள்ளார்.  அவர் அத்துடன் வளர்ச்சி ஆணையர் (டெவலப்மெண்ட் கமிஷனர்) பொறுப்பையும் பார்த்துக் கொள்வார்

2.       டி உதயசந்திரன் ஐ ஏ எஸ் அவர்கள் முதல்வரின் தலைமைச் செயலர் பதவியில் இருந்து நிதித்துறை தலைமைச் செயலராக மாற்றப்படுகிறார்.  முன்பு முருகானந்தம்  கவனித்த  பணிகளை அவர் கவனிப்பார்

3.       பி அமுதா ஐ ஏ எஸ் அவர்கள்  அரசின் ஊரக மற்றும் பஞ்சாயத்து ராஜ் வளர்ச்சி தலைமை செயலர் பதவியில் இருந்து அரசின் உள்துறை, மதுவிலக்கு மற்றும்  ஆயத்துறை செயலராக மாற்றப்பட்டுள்ளார்

4.       கே பனீந்திர ரெட்டி ஐ ஏ எஸ் அவர்கள் அரசின் உள்துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்துறை தலைமை செயலர் பதவியில் இருந்து மாற்றப்பட்டு போக்குவரத்து துறை  கூடுதல் தலைமை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

5.       கே கோபால் ஐ ஏ எஸ் அவர்கள் போக்குவரத்து துறை கூடுதல தலைமை செயலர் பதவியில் இருந்து மாற்றப்பட்டு, லஞ்ச ஒழிப்பு மற்றும் நிர்வாக சீர் திருத்த துறை கூடுதல் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

6.       ககன்தீப் சிங் ஐ ஏ எஸ் அவர்கள் சென்னை மாநகராட்சி ஆணையர் பதவியில் இருந்து   அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

7.       பி செந்தில் குமார் ஐ ஏ எஸ் அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தலைமைச் செயலர் பதவியில் இருந்து மாற்றப்பட்டு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்/

8.       கே மணிவண்ணன் ஐ ஏ எஸ் அவர்கள் பொதுப்பணித்துறை தலைமை செயலர் பதவியில் இருந்து சுற்றுலாத்துறை, கலாச்சாரம் ஆகிய துறைகளின் தலைமை செயலராக மாற்றப்பட்டுள்ளார்.

9.       பி சந்திர மோகன் ஐ ஏ எஸ் அவர்கள் சுற்றுலா, கலாச்சாரத்துறைகளின் தலைமைச்  செயலர் பதவியில் இருந்து பொதுப்பணித்துறை தலைமை செயலராக மாற்றப்பட்டுள்ளார்.

10.       ஜகந்நாதன் ஐ ஏ எஸ் அவர்கள் பொது மற்றும் மற்றும் மறு வாழ்வுத்துறை செயலர் பதவியில் இருந்து உணவுத்துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

11.       கே நந்தகுமார் ஐ ஏ எஸ் அவர்கள் பல்ல்லிக் கல்வி ஆணையர் பதவியில் இருந்து மனித வள மேலாண்மைத் துறைச் செயலராக மாற்றப்பட்டுள்ளார்.

12.      மைதிலி ராஜேந்திரன் ஐ ஏ எஸ் அவர்கள் மனித வள மேலாண்மைத் துறைச் செயலர் பதவியில் இருந்து இந்திய  மருந்துத்துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.

13.       எஸ் கணேசன் ஐ ஏ எஸ் அவர்கள் இந்திய மருந்துத்துறை ஆணையர் பதவியில் இருந்து பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் இயக்குநராக மற்றப்பட்டுள்ளார்/

14.       ஜே ராதாகிருஷ்ணன் ஐ ஏ எஸ் அவரக்ள் உணவு மற்றும்  நுகர்வோர் நல கூடுதல் தலைமை  செயலர் பதவியில் இருந்து மாற்றப்பட்டு சென்னை மாநகராட்சி ஆணையராகப் பொறுப்பு ஏற்கிறார்.

என அறிவிக்கப்பட்டுள்ளது.